• May 20, 2024

Month: September 2023

செய்திகள்

சனாதன பேச்சு சர்ச்சை: உத்தரபிரதேசத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவரது பேச்சுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு, ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் […]

ஆன்மிகம்

ஆலங்காட்டு ரகசியம்…

நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராக கோவில் கொண்டருளுகிறார். இக்கோவில் , ரத்தின சபை என்று போற்றப்படுகிறது. சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பார்கள். அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது… சிவபெருமானைத் தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். இப்படி வருவதைக் கண்ட பார்வதி, சிவபெருமானிடம், இவர் யார்? கேட்டாள். அதற்கு பதிலளித்த சிவபெருமான், […]

ஆன்மிகம்

குருவாயூர் கோவிலில் சிகப்பு நிற குண்டுமணி பிரார்த்தனை

குருவாயூர் கோயிலில் ஒரு பெரிய உருளியில் சிகப்பு நிற குண்டுமணியை நிரப்பி வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் அதை அளைந்து கொண்டு நோய்கள் குணமாகவும், குழந்தை வரம் வேண்டியும் மனதார பிரார்த்தனை செய்யவேண்டும். பிறகு மீண்டும் அதிலேயே போட்டு விட வேண்டும். இப்படியான ஒரு நடைமுறை இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும் இதனை செய்கிறார்கள்.  அது சரி. குருவாயூர் கோயிலில் இதற்கு அப்படி என்ன விசேஷம்? இதன் பின்னால் ஒரு சுவையான கதை உண்டு. ஒரு வயதான பெண்மணி […]

செய்திகள்

மதத்தை இழிவு படுத்துவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது ; டி.ஜெயக்குமார்  

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின் 152 வது பிறந்த நாளை ஒட்டி அதிமுக சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள வ.உ. சிதம்பரனார் திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது :- சனாதனம் குறித்து உதயநிதி  பேசியதற்கு பலரும்   கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.நடிகர் சத்யராஜ் ஒரு படத்தில் இரண்டு பிரிவினர் அடித்துக் கொண்டால்தான் நாம் பிரச்சனை இல்லாமல் இருக்க முடியும் என்கின்ற வகையில் நடத்திருப்பார். அதுபோல  ஒரு […]

கோவில்பட்டி

ஒர்க் ஷாப்பில் திருடியவர், கையும் களவுமாக பிடிபட்டார்  

கோவில்பட்டி கருணாநிதி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது 36). இவர் வேலாயுதபுரம்- சாத்தூர் ரோட்டிலுள்ள பிழைபொறுத்த அய்யனார் கோவில் அருகே ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவர் இரவு வேலையை முடித்து விட்டு அங்கேயே, இரவு காவலர் ஆர்தருடன் சேர்ந்து தூங்கினார். அதிகாலை சுமார் 4 மணிக்கு எழுந்தபோது, அங்கிருந்த மோட்டார் கியர் பாக்ஸை ஒருவர் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றதை கண்டு திடுக்கிட்டார். உடனே அவரை காவலர் ஆர்தருடன் சேர்ந்து […]

கோவில்பட்டி

பெண்ணிடம் தங்கசங்கிலி பறித்த 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை

ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிவஞானபுரம் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி செல்வராதா (வயது 59). இவர் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 18-ந்தேதி அன்று பணிக்கு சென்று விட்டு தூத்துக்குடியில் இருந்து பஸ்சில் எப்போதும்வென்றானுக்கு வந்தார். அங்கு  அவரை இளங்கோவன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். எப்போதும்வென்றான் ஏழு கண் பாலம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 […]

தூத்துக்குடி

விவசாய நிலத்தில் மேய்ந்த 13 ஆடுகளை கொன்றவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள இ.வேலாயுதபுரம் மேல தெருவை சேர்ந்தவர் உமையக்குஞ்சரம் (வயது 55). இவர் விளாத்திகுளம் அருகே உள்ள குமராபுரம் கிராமத்தில் 3 மாதங்களாக ஆட்டு கிடாய் போட்டு, அப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்தார். அப்போது வள்ளிநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் (38) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஆடுகள் மேய்ந்தன.  இதை கண்டித்த செந்தில்குமாருக்கும், உமையக்குஞ்சரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். இந்நிலையில் […]

தூத்துக்குடி

152-வது பிறந்தநாள்: ஓட்டப்பிடாரம் நினைவு இல்லத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு ஆட்சியர் மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 152-வது பிறந்த நாளினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழச்சி இன்று நடைபெற்றது. சிதம்பரனார் சிலைக்கு மாவட்ட ஆட்சியர்  கி.செந்தில்ராஜ்,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கே.எஸ்.ராகவேந்திரா, எஸ்.பி.சிவலிங்கம், எம்.முத்துவேல் தமிழ்நாடு வ.உ.சி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மாவட்டம் அறிவிக்க கோரி தேசிய விவசாயிகள் சங்கம் முற்றுகை போராட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிடும் போராட்டம் தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் ரெங்கநாயகலு தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு விருதுநகர் மாவட்ட தலைவர் மாரியப்பன்  முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தேசிய விவசாயிகள் சங்கம் தலைவர் ராமசாமி கொண்டார். கோவில்பட்டி ஒற்றுபட்ட திருநெல்வேலி மாவட்டமாக இருக்கும்போது கோவில்பட்டி துணை மாவட்டம் அந்தஸ்து பெற்று இருந்தது. கோவில்பட்டி இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் போக்குவரத்து தொடர்பில் உள்ள ஊர் ஆகும். கோவில்பட்டி வர்த்தகம், போக்குவரத்து, விவசாயம், தீப்பெட்டி ஆகிய […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று தொடங்கியது. திருவிழா வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் விழா நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகம் நடை பெற்று தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் […]