Month: June 2023

ஆன்மிகம்

பசுவும்… புண்ணியங்களும்

பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த  புண்ணியம் கிடைக்கும். பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும். பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் பசுவின் கழுத்துப் பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் கொடிய பாவங்கள் விலகும்.  பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும். பசு நடக்கும் போது […]

கோவில்பட்டி

கோவில்பட்டி, கயத்தாறில் அதிக அளவில் குழந்தை திருமணங்கள்; சமூக நலத்துறை அலுவலர் அதிர்ச்சி

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, யுனிசெப் நிறுவனம் மற்றும் தோழமை அமைப்பு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் எஸ்.ரதிதேவி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கூறியதாவது:-  18 வயதுக்கு குறைவான பெண்கள், 21 வயதுக்கு குறைவான ஆண்களுக்கு நடைபெறும் திருமணம் குழந்தை திருமணமாகும். குழந்தை திருமணங்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராம அளவில், வட்டார அளவில், […]

கோவில்பட்டி

மாணவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக திருக்குறள்

. கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து மாணவர்களுக்கும் பிறந்தநாள் அன்று திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியை செல்வி தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் 1330 திருக்குறளை படித்து குறள்நெறி வழி நடக்கவும், மாணவர்களின் கல்வி மேம்படவும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த் நிகழ்ச்சிக்கு  பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பிறந்தநாள் […]

செய்திகள்

கனிமொழி எம்.பி.பயணம் செய்த பஸ்சின் பெண் டிரைவர் பணிவிலகல்  

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வந்தார். கோவையின் முதல் பெண் டிரைவர் என்ற பெருமையை பெற்றிருந்த  ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் டிரைவர் ஷர்மிளா பிரபலமாகி வந்தார். இந்த நிலையில் தி.மு.க.துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி.இன்று கோவை பயணம் மேற்கொண்டார். அப்போது  ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு […]

செய்திகள்

திண்டுக்கல் மாநகராட்சி பெண் ஆணையாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

காஞ்சீபுரம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த மகேஸ்வரி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த மாதம் நியமிக்கபப்ட்டு பதவி ஏற்றார். திண்டுக்கல்லில் ஆர்.எம்.காலனி  காலனி 1வது தெருவில் தனியார் குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் அலுவலக விஷயமாக நடந்த கூட்ட்டத்தில் கலந்து கொண்டபிறகு நேற்று இரவு மகேஸ்வரி வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று காலை 6.30 ,மணி அளவில் .லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் மகேஸ்வரி வீட்டுக்கு […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 211.546 கிலோ தங்கத்தை உருக்கி தங்கக் கட்டிகளாக

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளில்  திருக்கோயிலுக்கு பயன்படாத நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டது. பின்னர் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் 211.546 கிலோ எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட தங்கத்தை , உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) செல்வி மாலா முன்னிலையில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கி மண்டல பொது மேலாளர் கோவிந்த் நாராயணன் கோயலிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்து […]

கோவில்பட்டி

கோவில் விழாவில் அன்னதானம்

கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 4 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சென்னை மண்டலத்தில் : 138 ,கோவை 78,மதுரை 125, சேலம் 59, திருச்சி – 100 டாஸ்மாக் மதுக்கடைகள், இன்று(வியாழக்கிழமை) முதல் மூடப்பட்டன, மதுரை மண்டலத்தில் இடம் பெற்றுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பாரதிநகர் காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம்

கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.  கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், சிறப்பு யாகங்கள் கலச பூஜை, ஜெபம், பாலாபிஷேகம்,  கோ பூஜை,  ஆராதனைகள் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகர். 32வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கவியரசன், 33வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சண்முகராஜ், தொழிலதிபர் பாண்டியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  அதனை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு […]

கோவில்பட்டி

காற்றாலை கனரக வாகனங்கள் சிறைபிடிப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தின் வழியாக காற்றாலை கனரக வாகனங்கள் சென்று வருவதால்  பாதிக்கப்படுவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து  கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை பகுதி வழியாக சென்ற கனரக வாகனங்களை அப்பகுதியினர் சிறைபிடித்து இன்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  அப்போது அவர்கள் கூறும்போது, “எங்களது ஊரின் வழியாகவும், விவசாயம், வாகன தடங்கள் வழியாகவும் 100-க்கும் மேற்பட்ட கனரக […]