Month: May 2023

கோவில்பட்டி

அப்பனேரி உள்பட 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி யூனியனில் சேர்க்ககோரி ஜூன் 19 மறியல்

கோவில்பட்டி கோட்டாட்சியர்  அலுவலகம் முன்பு தேசிய விவசாய சங்க தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமையில் மாவட்ட காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி, ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி, இளையரசனேந்தல் உரிமை மீட்புக் குழு தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் தலையில் முக்காடு அணிந்தும், ஒற்றை காலில் நின்றும் நூதன போராட்டம் நடத்தினர். பின்னர் கோட்டாட்சியர்  மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- ‘இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த அப்பனேரி, […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஆக்கிப்போட்டி: இன்று மாலை 3 ஆட்டங்களில்  மோதும் அணிகள்  

லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான  அகில இந்தியஆக்கி  போட்டிகள் கோவில்பட்டி செயற்கை புல்வெளி மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் நடைபெற்று வருகிறது. இன்று 23.5.2023(செவ்வாய்க்கிழமை) மாலை 3 போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் மோதும் அணிகள் விவரம் வருமாறு:- மாலை  5 மணி ஆட்டம் : மும்பை  யூனியன் பேங்க், -ஹூப்ளி  சவுத் வெஸ்டர்ன் ரெயில்வே அணிகள் மாலை 6.45 மணி ஆட்டம் : டெல்லி பெட்ரோலியம் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் போர்டு மற்றும்  பெங்களூரு ஸ்போர்ட்ஸ் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  இடமாற்றம் ரத்து

கடந்த சில தினங்களுக்கு முன்பு சில மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பணியிட  மாற்றம் செய்யப்பட்டு, கூட்டுறவு துறை பதிவாளராக நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.  மேலும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருக்கும் ராகுல்நாத், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜிக்கு பதிலாக நியமிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த் உத்தரவு வந்தபிறகும் ஆட்சியர் செந்தில்ராஜ் வழக்கம் போல் அரசு விழாக்களில் கலந்து கொண்டு வந்தார். அவரது ஆய்வு மற்றும் களப்பணிகள் தொடர்ந்து […]

தூத்துக்குடி

363 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் ஒன்றியங்களை சார்ந்த 363 கிராம குடியிருப்புகளுக்கான ரூ.515.72 கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் (ஜல் ஜீவன் மிஷன்) திட்ட அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.. சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அகில இந்திய ஆக்கி: ஓடிசா, பெங்களுரு, சென்னை, டெல்லி அணிகள் வெற்றி

கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி மைதானத்தில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 12-வது அகில இந்திய ஆக்கிப் போட்டிகள் நடந்து வருகிறது. 28ம் தேதி வரை  பகல் இரவு ஆட்டமாக மின்னொளியில் போட்டிகள் நடக்க்கும். 11 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 16 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.. இப்போட்டிகள் கால் இறுதி ஆட்டம் வரை லீக் முறையிலும், கால் இறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடைபெறுகிறது. ஐந்தாம் […]

தூத்துக்குடி

திருக்கோளூர் கிராமத்தில் அகழாய்வு பணிகளை கனிமொழி பார்வையிட்டார்

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்.கனிமொழி, இன்று 22.5.23 இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டலத்தின் மூலம் ஏரல் வட்டம் திருக்கோளூர் கிராமத்தில் நடைபெறும் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன்,ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்.எம்.சி.சண்முகையா ,திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குநர் முனைவர்.அருண் ராஜ் ஆகியோர் உடன் சென்று இருந்தனர், மேலும் அகழாய்வு பணிகளில் கிடைக்கப்பெற்ற பொருட்களையும் கனிமொழி  பார்வையிட்டார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கி சூடு 5-ம் ஆண்டு நினைவு தினம்

தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடைபெற்ற ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டின் 5-ஆம் ஆண்டு நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்வில் போராட்டத்தில் கொலை செய்யப்பட்டவர்களின் திருவுருவப் படங்களுக்கு .கனிமொழி எம்.பி. மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்கள். விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்.மார்கண்டேயன், மாநகராட்சி மேயர் தஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் தனியார் மண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் […]

செய்திகள்

தி.மு.க. ஆட்சி மீது கவர்னரிடம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் புகார்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இதற்காக அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி இன்று காலையில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகே […]

செய்திகள்

அதிமுக அலுவலகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள்,பொருட்கள் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைப்பு

அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே பிளவு ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி காலை இபிஎஸ் தரப்பில் பொதுக்குழு நடைபெற்ற நேரத்தில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலக பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை ஓபிஎஸ் வந்த வாகனத்தில் எடுத்து சென்றனர். அன்றைய தினம் ஓபிஸ், இபிஎஸ் தரப்பினர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் கூடாது; த.மா.கா. வலியுறுத்தல்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம்  முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கல்லூரியில் சேர தயாராகும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான குடியிருப்பு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் போன்றவற்றுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கிறார்கள். தொடர்ந்து சான்றிதழ் பெறுவதில் தாலுகா அலுவலகத்தில்  தாமதம்  ஏற்படுகிறது. இதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், அவர்கள் தங்கள் கண்களை துணியால மறைத்தபடி […]