கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் கூடாது; த.மா.கா. வலியுறுத்தல்

 கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் கூடாது; த.மா.கா. வலியுறுத்தல்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம்  முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று காலை கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தலைமையில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

கல்லூரியில் சேர தயாராகும் மாணவர்கள் தங்களுக்கு தேவையான குடியிருப்பு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் போன்றவற்றுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கிறார்கள். தொடர்ந்து சான்றிதழ் பெறுவதில் தாலுகா அலுவலகத்தில்  தாமதம்  ஏற்படுகிறது. இதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், அவர்கள் தங்கள் கண்களை துணியால மறைத்தபடி இருந்தனர்.

ஆர்ப்பாட்டம் முடிவில் கோட்டாட்சியரை சந்தித்து ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தமிழகத்தில் 10,  12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வு முடிவுகள் வெளியாகி தற்போது அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வியை நோக்கி செல்லும் நிலை உள்ளது. இதற்காக கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கான முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

அதேபோன்று ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதால் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் முயற்சியில்  ஈடுபட்டு வருகின்றனர்.அதிலும் குடும்பத்தில் முதல் பட்டதாரி என்றால் அரசு சார்பில் அதற்கென்று சலுகை வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கும், கல்விக்காக அரசு வழங்கி உள்ள உதவிகளை பெறுவதற்கும் குடியிருப்பு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முதல் பட்டதாரிக்கான சான்றிதழ் என ஆவணங்கள் தேவைப்படுகிறது.

இதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் செய்து வருகின்றனர். ஆனால் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் இதற்கான சான்றிதழ் வழங்குவதில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. சான்றிதழ் வழங்குவதில் காதாமதம் செய்கின்றனர். ஆன்லைனில் பதிவு செய்தாலும் , நேரில் சென்றால்விரைந்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இல்லையென்றால் ஏதாவது ஒரு காரணங்களை கூறுவது, அல்லது காதாமதம் செய்வது என்பது வாடிக்கையாக இருப்பதால் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும்  பெரும் இன்னலுக்குள்ளாகி வருவது மட்டுமின்றி மனவேதனை அடைந்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி அனைத்து சான்றிதழ்களும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் , காலதாமதம் செய்யும்  அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *