Month: December 2022

தூத்துக்குடி

தி.மு.க.சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் தேர்வு: விருப்பமுள்ளவர்கள் 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க.வின் 15-வது அமைப்பு தேர்தல் முடிவுற்று மாநில நிர்வாகிகள் மற்றும் கழக சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு,  பாக  அளவில் கழக சார்பு அணிகளுக்கு நிர்வாகிகளை தேர்வு செய்ய தலைமைக்கழகம் அறிவுறுத்தி உள்ளது. இளைஞரணி மகளிரணி, மாணவரணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு மாநகர, […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு 21-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் 35 ஆண்கள் 6 பெண்கள் என 41 ஊர்க்காவல் படை பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். இந்த தேர்வில்  10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும், 18 வயதுக்கு குறையாமலும் 45 வயதுக்கு மிகாமலும் இருப்பவர்களாகவும் சேவை மனப்பான்மையுடனும், தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களாகவும், எவ்வித குற்ற பின்னணி இல்லாதவராகவும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம். இத்தேர்வு […]

செய்திகள்

10 அமைச்சர்கள் இலாகா மாற்றம் ; உதய்நிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் முழு

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர்கள், சேகர்பாபு, மதி வேந்தன், , ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், கா.ராமச்சந்திரன், பழனிவேல் தியாகராஜன், […]

தூத்துக்குடி

அமைச்சர் கீதா ஜீவன், அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: அனைவரையும்

திமுக ஆட்சி காலத்தில் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி. இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.31 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக கடந்த 2001ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கீதா ஜீவனும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.பெரியசாமி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை மற்றும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசை கண்டித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன் ஏற்பாட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தூத்துக்குடி […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் துணிகரம் :மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து  ரூ.6 லட்சம் திருட்டு

கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு சங்கர் நகரை சேர்ந்த சேக் முகமது மகன் சையது முகமது புகாரி (வயது37). இவர் சண்முகா நகரில் தீப்பெட்டி மூலப்பொருள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் நேற்று மதியம் எட்டையாபுரம் ரோட்டில் உள்ள வங்கியில் ரூ.6 லட்சத்தை எடுத்து, மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் கோவில்பட்டி மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து . திரும்பி வந்தபோது பெட்டி […]

செய்திகள்

ஒவ்வொரு தொகுதிக்கும் மினி மைதானம்:, விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்ற உதய்நிதி

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். ‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற உடன் முதல்-அமைச்சர் முக. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பதவி ஏற்புவிழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய […]

செய்திகள்

உதய்நிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை ;டி. ஜெயக்குமார் சொல்கிறார்

சென்னை காவல் ஆணையரகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :- தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் பாடுபட்டு அயராது உழைத்து ஒரு குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து அதாவது திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து அவர்களை 13 ஆண்டுகள் வனவாசம் அனுப்பிய ஒரு மாவீரர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவருடைய 35 ஆம் ஆண்டு நினைவுநாள் வருகிறது.இந்த நினைவு நாளில் எதிர்க்கட்சித் தலைவர்,கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் புரட்சித்தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தி, அவருடன் தலைமைக்கழக […]

சினிமா

நடிகர் விஷால் நடிக்கும் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட `லத்தி’ திரைப்படம் 22ஆம்

புதுமுக டைரக்டர் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி  படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. அந்த விழாவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாங்கிட் மற்றும் விஜய் 67 படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லத்தி திரைப்படத்தின் தமிழ் டிரைலரையும், காவல்துறை அதிகாரி ஜாங்கிட் லத்தி திரைப்படத்தின் தெலுங்கு டிரைலரையும் வெளியிட்டனர். அதன் பின்பு […]

தூத்துக்குடி

போதை பொருள் விற்பனையை தடுக்க கோரி மறியல்; சமத்துவ மக்கள் கட்சியினர் நூற்றுக்கும்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மது, பான் பராக் போதை பொருள் விற்பனையை தடுக்க கோரி உண்ணாவிரதப் போராட்டம்  நடத்த அனுமதி கேட்டிருந்தனர், இதற்கு போலீஸ் அனுமதி தரவில்லை. இதனால் போலீசாரை கண்டித்தும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று காலை தூத்துக்குடியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர், இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலாளர் எஸ் ஆர் […]