பருவகால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவின் சார்பாக பருவகால நோய்களும் தடுப்பு முறைகளும் பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
முகாமிற்கு நூலக புரவலர் வினோபா தலைமை தாங்கினார்.நூலக பணியாளர் கலையரசி வரவேற்று பேசினார். சித்த மருத்துவர் டாக்டர். அபிநயா நோய் தடுப்பு முறைகள் குறித்து சிறப்புரையாற்றினார். அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை நூலகர் அழகர்சாமி செய்திருந்தார்