கோவில்பட்டி அருகே மகனை வெட்டிக்கொன்ற தந்தை-பரபரப்பு
![கோவில்பட்டி அருகே மகனை வெட்டிக்கொன்ற தந்தை-பரபரப்பு](https://tn96news.com/wp-content/uploads/2022/09/index.jpg)
கோவில்பட்டி அருகே காட்டுராமன்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்(வயது 53) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவருடைய இளைய மகன் முத்துக்குமார் (26), சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றி வந்தாராம். மேலும் மது அருந்தி விட்டுஅடிக்கடி வீட்டிற்கு வந்து தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
நேற்று இரவு வழக்கம் போல மது அருந்தி விட்டு வந்த முத்துக்குமார், தந்தையிடம் மது அருந்த பணம் வேண்டும் என்று கேட்டு தகாறு செய்தாராம். அவர் பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த முத்துக்குமார் அரிவாளை கொண்டு தந்தையை வெட்ட முயன்றார். சுதாரித்துக் கொண்ட முத்துராஜ் தன் மகனை கீழே விட்டு தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த அரிவாளை பறித்து மகனை வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்தது கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ் மற்றும் நாலாட்டின்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் முத்துகுமார் உடலை கைப்பற்றி உடற் கூறாய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள முத்துராஜை தேடி வருகின்றனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)