கோவில்பட்டியில் கன மழை ; மக்களை பயமுறுத்திய இடிச்சத்தம்
![கோவில்பட்டியில் கன மழை ; மக்களை பயமுறுத்திய இடிச்சத்தம்](https://tn96news.com/wp-content/uploads/2022/09/07f530d1-ddbc-4592-ad7c-e03f55c643c2-850x560.jpg)
கோவில்பட்டியில் இன்று காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று காலை 8 மணியில் மாலை 5 மணி வரை கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 8 துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாலை 3. மணிக்கு மேல் கருமேகம் திரண்டு வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது. 3.15 மணி அளவில் கன மழை பெய்யத்தொடங்கியது.
மழையின்போது பலத்த காற்றுடன் எழுந்த இடிச்சத்தம் மக்களை பயமுறுத்தியது. மேலும் மின்னல் வெட்டியது. இதன் காரணமாக குழந்தைகளை பெற்றோர் வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே இருக்க செய்தனர்.
அரை மணி நேரம் இடைவிடாமல் பெய்த கனமழை அதன்பிறகு படிப்படியாக குறைந்து காணப்பட்டது. அதே சமயம் இடி, மின்னல் குறையவில்லை. இதன் காரணமாக சாலைகளில் ஆட்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து குறைவாக இருந்தது. சில இடங்களில் ஐஸ் கட்டி மழை பெய்தது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இளையரசனேந்தல் ரோடு ரெயில்வே சுரங்க பாலத்தில் வழக்கம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/09/6b1d0cf3-35fa-43ed-bdb7-76625400445e.jpg)
கோவில்பட்டி புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டியது. கோவில்பட்டி அருகே கிழவிபட்டியில் உள்ள பள்ளியில் இருந்த பழமையான மரம் வேரோடு சரிந்து விழுந்தது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)