தூத்துக்குடி பள்ளியில் காலை உணவு: மாணவர்களுக்கு பரிமாறி, தரையில் அமர்ந்து கனிமொழி, கீதாஜீவன் சாப்பிட்டனர்
தமிழகத்தின் மாநகராட்சி, நகராட்சி, ஊரகம் (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ, மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு வகைகளில் ஏதாவது ஒன்றை அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் வழங்க வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது இயன்ற அளவு அந்தந்த பகுதியில் விளையும் அல்லது கிடைக்கும் சிறுதானியங்களின் அடிபடையிலான உணவு தயார் செய்து வழங்க வேண்டும்.
இந்த திட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது,.’
தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவிகளுக்கு காலை உணவு இன்று வழங்கப்பட்டது,.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில், அமைச்சர் .பெ.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், ,தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டனர்.
முன்னதாக அவர்கள் உணவின் தரம் சரியாக இருக்கிறதா? போதுமான அளவில் சமைக்கப்பட்டு இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மாணவர்களுக்கு பரிமாறவும் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 56 அரசு தொடக்கப் பள்ளிகளிலும், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 8 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மற்றும் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 2 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் இன்று இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.