• April 19, 2024

கோவில்பட்டி விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி நிறுவனமாக மாற்றும் திட்டம்; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

 கோவில்பட்டி விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி நிறுவனமாக மாற்றும் திட்டம்; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது அவரிடம் தமிழகத்தில் பல விமான ஓடுதளங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற எத்தனை விமான ஓடுபாதைகள் நம்மிடம் உள்ளன, அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது எனகேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தங்கம் தென்னரசு பதில் அளித்து கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும். மீதமுள்ளவை ஏ.ஏ.ஐ.அல்லது இந்திய ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படுகின்றன.

கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம் விமான ஓடுதளங்கள் இந்திய விமானப் படை கட்டுப்பாட்டில் உள்ளன. நெய்வேலி விமான ஓடுதளம் என்.எல்.சி.யிடம் உள்ளது.
கோவில்பட்டி விமான ஓடுதளத்தை முக்கிய திட்டமாக கையில் எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கோவில்பட்டி விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி நிறுவனமாக நிறுவ தமிழக அரசு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது, அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி விமான ஓடுதளம் பயன்பாடின்றி உள்ளதால் இதை எப்படி விமானப் பயிற்சி நிறுவனமாக மாற்றுவது என்பதை டிட்கோ அதற்கான திட்டத்தை வகுத்து வருகிறது.
மதுரை மற்றும் தூத்துக்குடியில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக தமிழக அரசு சொந்தமாக நிலம் கையகப்படுத்தி வருகிறது. அதிகப்படியான நிறுவனங்கள் தற்போது தென் தமிழகத்தில் முதலீடு செய்ய விரும்புவதால், தூத்துக்குடி மற்றும் மதுரை விமான நிலையங்களில் அதிகக் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளோம். மேலும் இரவு தரையிறங்கும் வசதிகளையும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *