கோவில்பட்டியில் பா.ஜனதா கட்சியினர் திடீர் மறியல்
கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து சார் பதிவாளர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் எம். சீனிவாசன்* தலைமையில் 3௦-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கண்டன கோஷம் எழுப்பியபடி இருந்தவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்ய தொடங்கி விட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்களை கைது செய்து அங்கிருந்து தனியார் மண்டபத்துக்கு அழைத்து சென்று தங்க வைத்தனர், சிறிது நேரத்தில் போக்குவரத்து சீரானது