• November 1, 2024

எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் மோதல் முற்றுகிறது: அ.தி.மு.க. வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு 2 பேரும் கடிதம்

 எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் மோதல் முற்றுகிறது: அ.தி.மு.க. வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு 2 பேரும் கடிதம்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க.வின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என வங்கிகளுக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். இதற்கு முன் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் . அ.தி.மு.க.வின் வங்கி வரவு செலவுகளை பராமரிப்பது, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம் ஆகியவற்றை வைத்திருந்தார். அந்த அதிகாரம் தற்போது திண்டுக்கல் சீனிவாசனுக்கு மாற்றப்படலாம் என தெரிகிறது,
இதனால், அ.தி.மு.க.வின் வங்கி வரவு செலவு கணக்குகள் அவற்றை கையாளுவதற்கான அதிகாரம் ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து திண்டுக்கல் சீனிவாசனிடம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க. பொருளாளர் நானே என்று அ.தி.மு.க. வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பி உள்ளார்.
தன்னை தவிர அ.தி.மு.க. வரவு, செலவுகளை கையாள வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என வங்கிகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். பொருளாளர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இருவருமே அ.தி.மு.க. வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. வங்கிக் கணக்குக்கு இரு தரப்பினர் உரிமை கொண்டாடுவதால் யாரை அனுமதிப்பது என வங்கிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது குறித்து அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அ.தி.மு.க. கட்சி நிர்வாகம் மற்றும் சின்னத்தை எங்களுக்கு வழங்க தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். நேற்று நடந்த விதிமீறல் பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். சட்ட நடவடிக்கைகள தொடரும். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமித்தது செல்லாது. ஓ.பன்னீர்செல்வம் உட்பட எங்களை நீக்கிய தீர்மானமும் செல்லாது.
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். அடிப்படை தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அம்மாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்தார் என்று கூறுவது ஏற்கக்கூடியதாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *