கோவில்களில் இத்தனை சக்தியா…? ஆச்சரியம் அளிக்கும் அறிவியல் தகவல்கள்

 கோவில்களில் இத்தனை சக்தியா…? ஆச்சரியம் அளிக்கும் அறிவியல் தகவல்கள்

நம் முன்னோர்கள் பின்பற்றும் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் ஒளிந்திருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் அவர்கள் எப்படி கண்டுபிடித்தனர் என்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது. அவ்வாறு, நாம் தெரியாமலேயே பின்பற்றி கொண்டிருக்கும் சில செயல்களில் இருக்கும் அறிவியல் உண்மையை தெரிந்துகொள்வோம்.

பொதுவாக நாம் அனைவரும் கோவில்களுக்கு இறைவனை வழிபடுவதற்கு தான் செல்வோம். ஆனால், அதையும் மீறி பல விஷயங்கள் கோவில்களில் இருக்கிறது. முதலில், கோவில்கள் எதற்காக கட்டப்படுகிறது? என்பதை தெரிந்துகொள்வோம்.

முன் காலத்திலிருந்தே, மின்காந்த சக்தி இருக்கும் இடங்களில் தான் கோவில்கள் கட்டப்படுகிறது. ஆனால், நம் முன்னோர்கள் அதனை எப்படி கண்டறிந்தனர் என்பது தான் தெரியவில்லை.

அதிலும், கோவில்களில் இருக்கும் கர்ப்பகிரகத்தில் தான் அந்த மின்காந்த சக்தியை அதிகம் உணர முடியும். நாம் வழக்கமாக காலணிகளை வெளியில் கழற்றி விட்டு தான் கோவிலுக்குள் செல்வோம்.

அவ்வாறு, கோவில்களுக்குள் வெறும் கால்களில் நாம் நடக்கும் போது அந்த காந்த சக்தி நம் உடலுக்குள் நேரடியாக செல்கிறது. அது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
ஒரு சில கோவில்களில் ஆண்கள் மேல் சட்டையில்லாமல் செல்ல வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கும். ஆனால், பழங்காலத்தில் ஆண்கள் அனைவரும் மேல் சட்டையில்லாமல் தான் கோவிலுக்குள் சென்றுள்ளனர்.

தற்போது, கோவில்களில் இருக்கும் ஐயர்கள் மட்டுமே மேல் சட்டையின்றி இருக்கின்றனர். இதற்கும் காரணம் இருக்கிறது. மனிதர்களின் முடியானது, நல்ல சக்தியை உள்வாங்கக்கூடிய திறன் கொண்டது. எனவே, ஆண்கள் மேல் சட்டையில்லாமல் கோவிலுக்குள் செல்லும் போது, அவர்களுக்கு அந்த சக்தி எளிதில் கிடைக்கிறது.

மேலும், வழக்கமாக பெரும்பாலான பெண்கள் கோவில்களுக்குள் தங்க நகைகளை அணிந்து செல்வார்கள். ஏனெனில் தங்கமும் நல்ல சக்தியை ஈர்க்கக்கூடியது. இதன் காரணமாகவே, பல்வேறு கோவில்களில் கோபுரங்கள் தங்கத்தில் இருக்கிறது.

எந்த ஊராக இருந்தாலும், அங்கு கோவில்களின் கோபுரம் தான் உயரமாக இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

இதற்கான காரணம் என்னவெனில், கோவில்களின் கோபுரத்தில் தானியங்கள், நிறைய இருக்கும். குறிப்பாக நெல் இருக்கும். எனவே, இடி, மின்னல்கள் பூமியை தாக்கும் போது முதலில் உயரமான கோபுரம் கொண்ட கோவிலை தான் அதிர்வுகள் தாக்கும்.

அப்போது, கோபுரத்தில் இருக்கும் நெல், அந்த அதிர்வுகளை உள்வாங்கிக்கொண்டு, கோவிலின் உட்பகுதி மற்றும் அடிப்பகுதியில் பரவச்செய்கிறது. இதனால், மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்படுகிறது.
கோவில்களில் இருக்கும் சிலைகள் நீண்ட காலங்களாக இருப்பதால், அதில் விரிசல் ஏற்பட்டுவிடும். எனவே, தான் மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், பால் போன்ற இயற்கை பொருட்களைக்கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், சிலையில் விரிசல் ஏற்படாமல் இருக்கிறது.

இதனால் தான், பல ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோவில்களில் இருக்கும் சிலைகள் , இன்றளவும் எந்த பாதிப்பும் இன்றி இருக்கின்றன,
கோவில்களில் உள்ள அரசமரத்தின் அடியில் விநாயகர் சிலை இருக்கும். குழந்தை இல்லாத பெண்கள் காலையில் குளித்துவிட்டு, ஈரத்துணியுடன் அந்த மரத்தை சுற்றி வந்தால், குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அரசமரம், அதிகமான ஆக்சிஜனை வெளியிடக்கூடியது. நம் உடலில் இருக்கும் ஹார்மோன்களில் ஏதேனும் சமமற்ற தன்மையில் இருந்தால், அதனை சரிசெய்யக்கூடிய திறன் இந்த உயிர்க்காற்றுக்கு இருக்கிறது.
பெண்கள், அந்த மரத்தை தினந்தோறும் சுற்றிவரும் போது, அவர்களுக்கு ஆக்சிஜன் நன்றாக கிடைத்து, கர்ப்பப்பை நன்கு இயங்கும்.

இதனால், கருத்தரிக்க முடிகிறது.

மேலும், தமிழர்களாகிய நாம் சாப்பிடுவதற்கு முன் வழக்கமாக காகங்களுக்கு உணவு வைப்பதுண்டு. இதற்கான காரணம் என்னவென்றால், முற்காலத்தில் மின்சாரம் கிடையாது. எனவே, காலையில் சமைக்கும் உணவில் ஏதேனும் விஷப்பூச்சிகள் விழுந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

காகங்களுக்கு விஷத்தன்மையை அறியும் திறன் உண்டு. விஷமுள்ள உணவுகளை காகங்கள் உண்ணாது. அவ்வாறு, காகங்கள் உண்டால் அது நல்ல உணவு என்றும், அவை உண்ணவில்லை எனில் அது விஷத்தன்மை கொண்டது என்றும் நம் முன்னோர்கள் அறிந்துகொண்டனர்.
காசி விஸ்வநாதன், திருநெல்வேலி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *