கொலை முயற்சி: தந்தை-மகன் கைது
கோவில்பட்டி தோணுகால் மேற்கு தெருவை சேர்ந்தவர் சுகுமாறன் (வயது 48). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் (64) என்பவருக்கும் இடையே பொது கால்வாயிலிருந்து தங்களது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது.
இந்த முன்விரோதம் காரணமாக சுகுமாறனிடம், முருகன் மற்றும் அவரது மகன் சமுத்திரவேல் (33) ஆகிய இருவரும் சேர்ந்து தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சுகுமாறன் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்கு பதிவு செய்து முருகன், அவரது மகன் சமுத்திரவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தார்.







