தூத்துக்குடியில் கார் விபத்து; மீட்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு
![தூத்துக்குடியில் கார் விபத்து; மீட்பு பணியில் போலீஸ் சூப்பிரண்டு](https://tn96news.com/wp-content/uploads/2022/06/100067af-37bf-4c04-8f48-b77b169d69a7.jpg)
மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மனைவி தமிழ்தங்கம் (வயது 62), அன்பழகன் மனைவி முத்துசெல்வி (49) ஆகியோர் தூத்துக்குடி ஸ்பிக் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தனர், காரை காளவாசல் பகுதியை சேர்ந்த 39 வயது நபர் ஓட்டினர்.
அந்த கார் தூத்துக்குடி துறைமுக சாலையில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
அப்போது அவ்வழியாக வந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் மற்றும் தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)