கோவில்பட்டி புதுரோடு உள்பட 5 இடங்களில் ஒரு வாரத்தில் 2-வது முறை மின்தடை

 கோவில்பட்டி புதுரோடு உள்பட 5 இடங்களில் ஒரு வாரத்தில் 2-வது முறை மின்தடை

பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒரு தடவை பகுதிவாரியாக ,மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கமாகி விட்டது. காலையில் இருந்து மாலை வரை மின் தடை செய்யாமல் எந்த பணி நடக்கும் இடத்தில் மட்டும் மின்தடை செய்துவிட்டு பணி முடிந்தவுடன் மின் சப்ளை கொடுத்து விட முடியும். அனால் மின்வாரிய அதிகாரிகள் அப்படி செய்வது கிடையாது.
கடந்த வெள்ளிக்கிழமை (17.6.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவில்பட்டி மற்றும் விஜயாபுரி துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டது.
குறிப்பாக நடராஜபுரம், முகமது சாலியாபுரம், புதுக்கிராமம், கடலையூர் ரோடு மற்றும் புதுரோடு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டது,
இந்த நிலையில் இன்று (21.6.22) மறுபடியும் மேற்கண்ட 5 இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இரு முறை மின்தடை காரணமாக இப்பகுதியினர் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஜெனரேட்டர் வைத்திருக்கும் கடைக்காரர்கள் பெட்ரோல் செலவை சமாளிக்க முடியாமல் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.
கோவில்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மட்டும் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பைபாஸ் ரோடு , மூப்பன் பட்டி, இளையரசனேந்தல் மெயின் ரோடு, நடராஜபுரம், மார்க்கெட் ரோடு, பழைய பேருந்து நிலையம், முகமது சாலியாபுரம், சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், புதுக்கிராமம், பூரணி அம்மாள் காலனி, கடலையூர் ரோடு, புது ரோடு, ரெயில்வே நிலையம், ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *