10, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது
தமிழகத்தில் 10 ,பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார்.
*10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம்
- 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடம்
- 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம்
*பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் 97.95 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் - 97.27 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடம் * 97.02 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3 வது இடம் பிடித்துள்ளது.
மேலும் பள்ளிக்கல்வித்துறையின் இணைய பக்கங்களில் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக மதிப்பெண்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டிருந்தது. மேலும், பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவை அறிந்துகொள்ளலாம்.
இதுதவிர, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவு அனுப்பப்பட்டு வருகிறது.