• February 7, 2025

அ.தி.மு.க ஒற்றை தலைமை சுமுகமாக முடியும்- பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும்; டி.ஜெயக்குமார் பேட்டி

 அ.தி.மு.க ஒற்றை தலைமை சுமுகமாக முடியும்- பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும்; டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னையில் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

23 ம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூடவுள்ள நிலையில் பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றுவது என்பது தொடர்பாக ஏற்கனவே ஒரு கூட்டம் நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக இன்றைக்கு 11 பேர் கொண்ட குழு கூட்டம் நடைபெற்றது. அடுத்த கூட்டம் 18 ம் தேதி நடக்க உள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.
மாவட்டச் செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் ஒற்றை தலைமை என்பது. நானோ மற்றவர்களோ குறிப்பிட்டு இது குறித்து பேசவில்லை. யாருடைய மனதும் புண்படும் வகையில் யாரும் செயல்படவில்லை. எந்த முடிவாக இருந்தாலும் ஒருமித்த கருத்தோடுதான் எடுக்கப்படும்.
ஒரு கருத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டுவரும்போது அது செயல்வடிவம் பெறலாம். பெறாமலும் போகலாம். நீங்கள் யாரும் அவசரப்படவேண்டியதில்லை. அனைத்தும் சுமுகமாக முடியும். அனைத்தையும் கட்சி முடிவு செய்யும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *