தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களுடன் 4 பேர் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அசோகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கடலையூர் மெயின்ரோட்டில் உள்ள ஒரு ஸ்டோர் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் வள்ளுவர் நகரைச சேர்ந்த சக்திவேல் (47), கூசாலிபட்டி சங்கரநாராயணன் (40), தெற்கு திட்டங்குளம் திராவிடசெல்வம் (59) கோவில்பட்டி லாயல்மில்காலனி ராஜபாண்டி (41) ஆகியோர் என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 138 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிலுவை அந்தோணி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
