தி.மு.க.வில் இருந்து பில்லா ஜெகன் நீக்கம்

தூத்துக்குடி சின்னகடை தெருவைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும் உள்ளார். இவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி மாநகரத்தை சேர்ந்த எஸ்.ஜே.ஜெகன், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
