உடலில் பற்றி எரிந்த நெருப்புடன் கள்ளக்காதலியை கட்டிப்பிடித்த வாலிபர்
திண்டுக்கல் அடுத்த தவசிமடை அருகே உள்ள வாடிபட்டி காலனியை சேர்ந்த வாசிமலை என்பவரது மனைவி புவனேஸ்வரி (வயது 30). இவருக்கும் மதுரை மாவட்டம் பேரையூர் சேர்ந்த சந்துரு (23). என்பவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
நாளடைவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சந்துருவுடன் இருந்த பழக்கத்தை புவனேஸ்வரி தவிர்த்து வந்தார். இதனையடுத்து நேற்று புவனேஸ்வரி வீட்டிற்கு வந்த சந்துரு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்ட அவர், அருகில் நின்று கொண்டிருந்த புவனேஸ்வரியை கட்டிப்பிடித்தார். இதனால் புவனேஸ்வரி உடலிலும் தீப்பற்றிக்கொண்டது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆபத்தான நிலையில் உள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)