கோவில்பட்டியில் பா.ஜனதா பொதுக்கூட்டம்
![கோவில்பட்டியில் பா.ஜனதா பொதுக்கூட்டம்](https://tn96news.com/wp-content/uploads/2022/06/4e2463fb-914b-4bd2-8c24-60535f586041-Copy-850x382.jpg)
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டு சேவைகளை மக்கள் மத்தியில் விளக்கும் பொதுக்கூட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பொதுச்செயலாளர் வேல்ராஜ் வரவேற்று பேசினார்,. மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், மாவட்ட பார்வையாளர் கட்டளை ஜோதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
![](https://tn96news.com/wp-content/uploads/2022/06/4e2463fb-914b-4bd2-8c24-60535f586041-1024x511.jpg)
மாவட்ட பொது செயலாளர் சரவணக்குமார்,மற்றும் கிஷோர்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநெல்வேலி முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து செயலாளர்கள் ராஜகாந்தன் பிரபாகர், அழகு மணிகண்டன் விக்னேஷ் ஹரி பாலகிருஷ்ணன் சங்கரநாராயணன் மாவட்ட துணை தலைவர் பாலமுருகேசன், சேதுராஜ்,ராஜேந்திரன்,முத்துமாரி,மாவட்ட செயலாளர்கள் லிங்கேஸ்வரி,லிங்கராஜ்,ஆத்திராஜ்,கவிதா, செந்தில்பிரபு மற்றும் திரளான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கணேஷ் நன்றி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)