செண்பகவல்லி அம்மன் கோவிலில் பிரதோஷ பூஜை
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆண், பெண் பக்தர்கள் அதிகம் பேர் கூடி இருந்தனர். சிவலிங்கத்துக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
அதை தொடர்ந்து நந்திகேஸ்வரருக்கு அபிஷேக, தீப ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.