கோவில்பட்டியில் நகர் நல மையம் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு பகுதியான ஊரணி தெருவில் செயல்பட்டு வந்த நகர் நலமைய கட்டிடம் சேதமடைந்த காரணத்தினால் அதை இடித்து விட்டு ரூ 75 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட நகராட்சி சார்பில் முடிவு எடுக்கப்பட்டது.
இதன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ். நகராட்சி ஆணையர் ராஜாராம், நகராட்சி பொறியாளர் ரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் தவமணி, விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.