கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வேலை உறுதி திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கக் கோரி மனு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 6 மாதங்களாக கூலி வழங்கப்படாததால் ஏழை எளிய மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, இந்த திட்டத்தில் பணியாற்றும் முறையாக சம்பளம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு தலைமை தாங்கினார்.இளைஞர் பெருமன்ற மாநில துணை தலைவர் ரஞ்சனி கண்ணம்மா, நகரச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா உதவிச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் பாலமுருகனிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளர்கள் மாரியப்பன், ஸ்ரீரெங்கநாதன், சுரேஷ்குமார், சின்னகொம்பையா, ரஞ்சிதம், செல்வம், விசாலாட்சி, ஏஐடியுசி தர்மராஜ் மற்றும் மந்தித்தோப்பு, குமராபுரம், ஊத்துப்பட்டி,இனாம் மணியாச்சி,தாமஸ் நகர்,செண்பகப்பேரி, வடக்கு திட்டங்குளம், மேல பாண்டவர்மங்கலம் பகுதியைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
