சென்னை போராட்டத்துக்கு கோவில்பட்டியில் இருந்து 2 குழுக்களாக செல்ல தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார்.
நகர தலைவர் டி.கருப்பசாமி மாவட்ட பொருளாளர் செண்பகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் பொதுச் செயலாளர் அய்யாதுரை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணை தலைவர்கள் சிங்கராஜ் ராஜமாணிக்கம் மாவட்ட செயலாளர் திருமுருகன், நகர துணை தலைவர் தங்கபாண்டியன் நகர பொது செயலாளர் காளிராஜ் வட்டாரத் துணைத் தலைவர் தங்கராஜ் ஆறுமுக கனி கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி கூட்டத்தில் கோவில்பட்டி அரசு அலுவலக வளாகச் சாலையை சீரமைத்து புதுப்பிக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வரும் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து 2025, மார்ச் 19-ம் தேதி தமிழக சட்டமன்றம் முன்பு நடைபெற இருக்கும் “அல்வா” கொடுக்கும் போராட்டத்திற்கு வருகிற 17- ஆம் தேதி ஒரு குழுவும் 18-ம் தேதி அன்று ஒரு குழுவும் அனந்தபுரி விரைவு ரெயிலில் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. என்று வடக்கு மாவட்ட தமாகா தலைவர் என்.பி,ராஜகோபால் தெரிவித்தார்.
