• March 14, 2025

கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் இருந்து பவுர்ணமி நிலாவை டெலஸ்கோப் மூலம் பார்த்து வியந்த பக்தர்கள்

 கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் இருந்து பவுர்ணமி நிலாவை டெலஸ்கோப் மூலம் பார்த்து வியந்த பக்தர்கள்

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும்  மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகளை உருவாக்கி அதன் மூலம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பரப்பரை செய்து வருகிறது

.இந்தாண்டு 5000 இடங்களில் அஸ்ட்ரானமி,ஆயிரம் இடங்களில் அஸ்ட்ரானமி ஆய்வகம்,விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் வைக்கப்பட்டுள்ள டெலஸ்கோப் மூலம் கோவிலுக்கு வருகை வந்த பக்தர்கள் வானில் தெரிந்த பவுர்ணமி நிலா மற்றும் வியாழன் ,செவ்வாய் கோள்களை பார்வையிட்டு வியந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன், டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் வானவியல் குறித்தும் கோள்கள் குறித்து விளக்கி கூறினர்.

கோவில்பட்டி விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கர் குடும்பத்துடன் வருகை தந்து டெலஸ்கோப் மூலம்  நிலாவை  பார்வையிட்டார், கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள்  அனைவரும் டெலஸ்கோப்பில் பவுர்ணமி நிலா, வியாழன் ,செவ்வாய்,கோள்களை பார்வையிட்டு வியந்தனர்.

அவர்கள் கூறுகையில் “எங்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மிக அருகில் பவுனர்ணமி நிலாவை பார்த்தது பிரமிப்பாக இருந்தது,” என்று குறிப்பிட்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *