தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சி.எஸ்.ஆர் நிதியுதவியின் கீழ் மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஓய்வு பெற்ற மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சேமநலநிதி வட்டித் தொகை வழங்கும் விழா மாநகராட்சி மாநாடு மையத்தில் நடைபெற்றது.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்து கொண்டு, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்களையும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் மருத்துவ உபகரணங்களையும், ஓய்வுபெற்ற மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சேமநலநிதியில் இருந்து வட்டித்தொகை ஆகியவற்றையும் வழங்கினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கூடுதல் தலைமை பொது மேலாளர் விஜயகுமார் மற்றும் துறைசார் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
