மக்கள் தொகைக்கு ஏற்ப வி.ஏ.ஒ. பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்;கோவில்பட்டியில் நடந்த மாநில பொதுக்குழுவில் வலியுறுத்தல்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி சவுபாக்கியா மஹாலில் நடந்தது.மாநில தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சுப்பையா, துணைத் செயலாளர்கள் சுப்புராஜ், ராஜபாண்டி, துணைத் தலைவர் உலகநாதன், திருச்செந்தூர் கோட்டச் செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட பிரசார செயலாளர் சந்தனமாரியம்மாள் ,மாவட்ட மகளிர் அணி செயலாளர் அபிராமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் செல்வன் தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். மாநில பொருளாளர் ராஜ்குமார், மாநில துணைத் தலைவர் பாலகிருஷ்ணன்,மாநில செயலாளர்கள் பாண்டியன்,கணேபெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
TNFVAOA மாநில நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன்,குமரேசன், முருகேசன்,சுடர்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடக்கத்தில் மாவட்ட செயலாளர் வைரமுத்து வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் சித்துராஜ் நன்றி கூறினார்.தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பொதுக்குழு உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
*கிராம நிர்வாக அலுவலர்களின் மாவட்ட மாறுதல்களில் உள்ள நடைமுறை சிக்கல்களை மாற்றி அமைக்க வேண்டும்.
*வி.ஏ.ஒ.க்களுக்கான அடிப்படை கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்.
*தற்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கிராம நிர்வாக அலுவலர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.
*பொது மாறுதல் கலந்தாய்வுக்கான உள்ள குறைகளை திருத்த வேண்டும். *பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
*வருவாய் தீர்வாய செலவின தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.
*கிராம நிர்வாக அலுவலர்களாக இருந்து பதவி உயர்வில் செல்பவர்களுக்கு பதவி உயர்வில் உள்ஒதுக்கீடு முறையில் சீனியாரிட்டியில் 30 சதவீதம் வழங்க வேண்டும்.
மேற்கண்டவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
