டெல்லி குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்று 3 பதக்கங்கள் பெற்ற கோவில்பட்டி மாணவிக்கு வரவேற்பு
![டெல்லி குடியரசுதின அணிவகுப்பில் பங்கேற்று 3 பதக்கங்கள் பெற்ற கோவில்பட்டி மாணவிக்கு வரவேற்பு](https://tn96news.com/wp-content/uploads/2025/02/705a3a71-5ece-4ef3-bf26-01663c599a85-850x560.jpeg)
![](https://tn96news.com/wp-content/uploads/2025/02/5ad07182-14e6-48db-a6f4-790b65fb2668-896x1024.jpeg)
டெல்லியில் நடைபெற்ற 76வது குடியரசு தின அணிவகுப்பில் கோவில்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி கனகலட்சுமி என்ற ஆஷிகா பங்கேற்றார். இவர் என்,சி,சி, மற்றும் ஆர்.டி.சி. முகாம் மற்றும் பரத நாட்டிய நாட்டிய கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு 3 பதக்கங்கள் பெற்றார்..
இதை தொடர்ந்து டெல்லியில் இருந்து கோவில்பட்டி திரும்பிய அவருக்கு அண்ணா பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள கோவில்பட்டி தேவர் சிலை முன்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் வெண்கல சிலை பராமரிப்பு அறக்கட்டளை, தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம், வீரவாஞ்சி நகர் தேவர் சமுதாயம் மற்றும் தேவர் திருமகனார் இளைஞரணி, கோவில்பட்டி தேவர் சமூக நலச்சங்கம், பாரதிய ஜனதா கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்த வரவேற்பில் பங்கேற்றனர்,
மாணவி கனகலட்சுமி என்ற ஆஷிகா , கோவில்பட்டி சரமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சி.சரவணன்-மகாலட்சுமி தம்பதியரின் மகள் ஆவார்.. இவர் தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரியில் பி.காம்.படித்து வருகிறார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)