‘கான்ஜூரிங் கண்ணப்பன் 2’ உருவாகிறது
![‘கான்ஜூரிங் கண்ணப்பன் 2’ உருவாகிறது](https://tn96news.com/wp-content/uploads/2025/02/38225459-5a.webp)
பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ். இவர் ‘மெரினா, தமிழ் படம், கத்தி, மான்கராத்தே, ரெமோ, வேலைக்காரன், கலகலப்பு 2‘ போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் ‘நாய் சேகர்‘ என்ற திரைப்படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
அதனை தொடர்ந்து, ‘கான்ஜுரிங் கண்ணப்பன், சட்டம் என் கையில்’ ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சதீஸ் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.
இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)