• February 8, 2025

பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

 பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ம் தேதி முதல் வகுப்பு புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்ட நாட்களாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதுவரையிலும் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.57,700 வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் போராட்டக் காலத்தை பணக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவில்பட்டியில் கவுரவ விரிவுரையாளர்கள் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா பஸ் நிலையம் எதிரே அரசு விருந்தினர் மாளிகை முன்புறம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோவில்பட்டி, நாகலாபுரம், திருச்சுழி, ஆலங்குளம், சாத்தான்குளம், கடையநல்லூர், அருப்புக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக தரம் உயர்த்தப்பட்ட கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

,அவர்களுக்கு ஆதரவாக  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன்,அதிமுக நகரச் செயலாளர் விஜயபாண்டியன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சீனிவாசன்,ஒன்றிய செயலாளர் தேய்வேந்திரன்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜசேகரன், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் ராஜசேகர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின்,தமிழக வெற்றிக்கழகம் மாநிலகொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார்,அனைத்து அரசியல் கட்சி மற்றும் அனைத்து ஜனநாயக அமைப்புளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *