மாவட்ட அளவிலான கபடி போட்டி; கவுன்சிலர் கவியரசன் தொடங்கி வைத்தார்
கோவில்பட்டி காமராஜர் நகர் கருமாரியம்மன் கோவில் திடலில் ப்யூசர் பைட்டர் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாபெரும் மின்னொளி கபடி போட்டி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
போட்டியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன் கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் கார்த்திக், நகர தலைவர் மலையரசன், இளைஞரணியினர் இராமகிருஷ்ணன் சேகர், அதிமுக நகர அம்மா பேரவை பொருளாளர் விக்னேஷ், இளைஞர் பாசறையினர் சூரியா, பிரவின், கவிபாரதி, அஜித்,ஆறுமுகம், விழா கமிட்டி குமார், கருடன் அஜய் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
நிகழ்ச்சி ஏற்பாட்டினை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் மாரிச்செல்வம் செய்திருந்தார்