ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் காலமானார்

 ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் காலமானார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக  கொள்கை பரப்பு துணை செயலாளாருமான பி.ஆர்.சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 73.

பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்

அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்த  பி.ஆர்.சுந்தரம், கட்சியின் மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்தவர். 1996 முதல் 2006 வரை இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.

அதிமுகவில் நீண்ட காலம் பயணித்த பி.ஆர்.சுந்தரம் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். பின்னர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கொள்கை பரப்பு துணை செயலாளராக பணியாற்றினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *