வீடு புகுந்து தாக்குதல்: நடிகர் சயிப் அலிகானுக்கு 6 இடங்களில் கத்திக்குத்து

 வீடு புகுந்து தாக்குதல்: நடிகர் சயிப் அலிகானுக்கு 6 இடங்களில் கத்திக்குத்து

மும்பை, பாந்த்ராவில் உள்ள  பிரபல இந்தி சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று  அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் நுழைந்தார். அங்கிருந்த பணிப்பெண்ணுடன் அந்த மர்மநபர் வாக்குவாதம் செய்துள்ளார்.

சத்தம் கேட்டு அங்குவந்த சயிப் அலிகானை, அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில் படுகாயமடைந்த சயிப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை தேடி வருகின்றனர்.

சயிப் அலிகான் உடல்நலம் குறித்து லீலாவதி மருத்துவமனை தலைமை இயக்க அதிகாரி கூறும்போது,  “சயிப் அலிகான் அவரது வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். அவருக்கு 6 இடத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு ஆழமானவை. ஒரு காயம் அவரது முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *