நேஷனல், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கங்களின் புதிய நிர்வாகிகள் தேர்வு: தீப்பெட்டி நூற்றாண்டு விழாவை கோவில்பட்டியில் நடத்த முடிவு
கோவில்பட்டி நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றின் பொதுக்குழு கூட்டம் தேர்தல் ஆணையர் டி.. ராஜீ தலைமையில் கோவில்பட்டியில் இன்று நடைபெற்றது,
கூட்டத்தின் போது இரண்டு சங்கங்களுக்கும் புதிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள் அதன்படி நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக எம் பரமசிவம்,செயலாளராக ஆர் கோபால்சாமி, பொருளாளராக ஜோசப் ரத்தினம், துணைத் தலைவர்களாக டி ராஜு , ஆர் எஸ் சுரேஷ், இணைச் செயலாளராக ஜி கதிரவன் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதே போல் தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவராக எஸ் ரத்தினகுமார், வழி காட்டு தலைவராக ராஜேந்திரகுமார் பகடி, செயலாளராக முத்து சின்ன கொம்பையா,பொருளாளராக என் சித்தரஞ்சன்,துணை தலைவர்களாக மா. சுரேஷ் ரித்திக் ஜெயின் இணைச்செயலாளராக .கி.மகேந்திரன் ஆர். ராகேஷ் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.
கூட்டத்தில் தீப்பெட்டி நூற்றாண்டு விழாவை கோவில்பட்டியில் மத்திய, மாநில அமைச்சர்களை அழைத்து சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது,
விழா செலவுகளை சங்க உறுப்பினர்கள் மற்றும் மூலபொருள் விற்பனையாளர்களிடம் பெற வேண்டும் என்று தீர்மானிக்கபட்டது.
உத்தர் பாரத் சேவா சங்கம் சார்பில் ரூ. 10 லட்சம் சங்கத்திற்க்கு நன்கொடை வழங்கப்பட்டது
தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க தமிழ்நாடு முழுவதும் பிளாஷ்டிக் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்ககோரி சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செ.கடம்பூர் ராஜூக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் திறைவேற்றப்பட்டது.
முடிவில் இணச்செயலாளார் கதிரவன் நன்றி கூறினார்
முன்னதாக புதிய நிர்வாகிகளை தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிறுவனர் என்.ராஐவேல், துணை தலைவர் சுரேஷ், சாத்தூர் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் லட்சுமணன் சாத்தூர் பெருமாள் சாமி, மற்றும் , முகேஷ் ஜெயின், எத்திராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.