வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா: கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு
![வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா: கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு](https://tn96news.com/wp-content/uploads/2025/01/e0b50458-032a-47f8-94d2-9bc004856de7-850x560.jpg)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகர துணை செயலாளர் முனியசாமி தலைமையில் தன்னார்வ நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு நல மையத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் பொன்னம்மாளிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
கோவில்பட்டி வட்டத்தில் ஏழை எளிய வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க விண்ணப்பித்துள்ளோம். இதுவரை 86 பேருக்கு வீட்டுமனை பட்டா கேட்டு மனுக்கள் அளித்துள்ளோம். இந்த மனுக்களை விசாரித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மனு அளித்த போது தன்னார்வ நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நலமையம் தலைவர் முருகன்,செயலாளர் இசக்கிமுத்து, பொருளாளர் செண்பகராஜ், துணைத் தலைவர் மாரியப்பன், துணைச் செயலாளர் ஜெய்கணேஷ், இணைச் செயலாளர்கள் சத்தியமூர்த்தி, மணிகண்டன்,கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)