ஒரே சமயத்தில் 100 லிட்டர் தண்ணீர் அருந்தும் ஒட்டகம்

 ஒரே சமயத்தில் 100 லிட்டர் தண்ணீர் அருந்தும் ஒட்டகம்

`பாலைவன கப்பல்’ என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே  எற்பட்ட பழக்கம் என்பது இன்று நேற்றல்ல. பல நூற்றாண்டுகளாகும்.

பூமியின் மிகவும் விரோதமான சுற்றுச்சூழலில் ( வறண்ட பாலைவனத்தில் ) வாழும் மில்லியன் கணக்கான ஏழைக்குடும்பங்களின் முக்கிய வாழ்வாதாரமாகவும் போக்குவரத்து சாதனமாகவும் இருப்பது ஒட்டகங்களே…!

ஒட்டகங்கள்  தாவர உண்ணியாகும் மெல்லிய கழுத்தும் நீண்ட கால்கள் அகன்ற வயிறு கொண்ட ஓட்டகங்களின் பற்கள் கூர்மையானவை.

பொதுவாக ஒட்டகங்கள் 30- 50ஆண்டுகள் உயிர்வாழக்கூடியவை. 4-5 நாட்கள் கூட நீர் அருந்தாமல் வாழக்கூடியவை மீண்டும் நீர் அருந்தினால் ஒரே சமயத்தில் 100லிட்டர் தண்ணீர்  அருந்தத்கூடியவை. சிலவகை ஒட்டகங்கள்  உப்பு தண்ணீரை கூட பருகும்..

ஒட்டங்களின் திமிலை பொருத்து வகைபடுத்தப்படுகிறது. ஒரு கம்பு ஒட்டகங்கள் ( ட்ரோமெடரினா ஒட்டகங்கள் ) ஒரு திமில் கொண்டவை இரண்டு திமிழ் ஒட்டகங்கள்( பாக்டிரியன் ஒட்டகங்கள் இரண்டு கம்பு கொண்டவை.

கிளானஸ் என்ற உறுப்பு ஆண் ஒட்டகங்களின் கழுத்தில் காணப்படும். இது ஆதிக்கம் செலுத்துவதுடன் பெண் ஒட்டகங்களை ஈர்க்கவும் செய்வதாக நம்பப்படுகிறது. ஒட்டகப்பால்  இது எருமை பாலைவிட அடர்த்தியானது நிறைய மருத்துவ குணமுள்ளது.இது சூப்பர் புட்  ஆகவும் ,ஆஸ்துமா, ஒவ்வாமைக்கு மருந்தாகவும்  பயன்படுத்தபடுகிறது.

ஏறத்தாழ ஓரு ஓட்டகத்தின் எடை 450 முதல் 600 கிலோ வரை இருக்கும். இதனுடைய இறைச்சியை பல ஆண்டுகளாக சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக சோமாலியா, எகிப்து , சூடான் சிரியா எதியோப்பியா போன்ற நாடுகளில் அதிகமாக சாப்பிட்டு வருகின்றனர்.அதிக புரதசத்துயுடன் கொழுப்பு நிறைந்தது.

பாலைவனத்தில் பயிரிடப்படும் பேரீட்சை மற்றும் இதர தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்த படுகிறது. இவற்றை பயன்படுத்துவதால் மண்ணின் கரிமசத்து அதிகரிப்பதுடன் நல்ல விளைச்சலை தருவதாக அறியப்படுகிறது.

90 க்கு மேற்பட்ட நாடுகளில் வாழும் ஒட்டகங்கள் இன்று படிப்படியாக குறைந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. தற்போது இந்திய அளவில் 2 லட்சம்  ஒட்டகங்கள் அளவுக்கு எண்ணிக்கையில் குறைந்து விட்டன.

எனவே ஒட்டகங்களை பாரம்பரிய பராமரிப்பாளர்களை அரசு பாதுகாக்க வேண்டுமென கால்நடை பராமரிப்புதுறை கேட்டுக்கொண்டுள்ளது.

அக்ரி சு.சந்திர சேகரன்.,வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *