கோவில்பட்டியில் த.வெ.க. உறுப்பினர்கள் சேர்ப்பு விழா
தமிழக வெற்றிக் கழகத்தின் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக “தளபதியின் தங்கைகள் தாய்மார்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா” கோவில்பட்டி காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் சத்யா தலைமை தாங்கினார், ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத் தலைவர் சஜி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். 500-க்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். அவர்களை வரவேற்று சால்வை அணிவிக்கப்பட்டது.
நிர்வாகிகள் செந்தில் குமார், வினோத்கண்ணன், ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தனர். முனைவர் சம்பத்குமார் எழுச்சியுரை ஆற்றினார், கேத்திரினா பாண்டியன் கொள்கை விளக்க உரை ஆற்றினார்.
பாளையங்கோட்டை மகளிர் அணி டி.சுபர்தனா, நெல்லை ஜான், ஓட்டப்பிடாரம் பாலசுப்பிரமணியம், தூத்துக்குடி சாமுவேல் ராஜ், ஸ்ரீவைகுண்டம் ஜெகன், நெல்லை புல்லட் ராஜா, பைசல் ரகுமான், ராஜகோபால், மதன்ராஜா, கருப்பசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் சுரேஷ் சத்யா உறுதிமொழியை வாசிக்க புதிதாக கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்கள் திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துகொன்டனர், தொடக்கத்தில் மகளிர் அணி முத்து கோமதி வரவேற்று பேசினார், கூடலிங்கம் நன்றி கூறினார், நிகழ்ச்சியை சுதா தொகுத்து வழங்கினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத் தலைவர் சஜிக்கு செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ஸ்கேட்டிங் வீரர்கள் அணிவகுத்து ஊர்வலமாக அவரை விழா மண்டபத்துக்கு அழைத்து வந்தனர்,.