தொடர்மழை: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
![தொடர்மழை: தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை; மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை](https://tn96news.com/wp-content/uploads/2024/12/39c1d405-9acf-44ea-b526-5626af6b520b.jpeg)
தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை. காரணமாக தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் டிச.,12,13 ஆகிய தேதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், மாவட்டத்தில் நாட்டு படகுகள், விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன,.
மேலும் தொடர் மழை காரணமாக சென்னை விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கரூர், ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது
நெல்லை மாவட்டத்தில் 1 – 5ஆம் வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. திருண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது, இதே போல் புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன,
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)