திருக்கார்த்திகை தீபத் திருவிழா
![திருக்கார்த்திகை தீபத் திருவிழா](https://tn96news.com/wp-content/uploads/2024/12/deepam-163-1573956486-1606472949-1634534495.jpg)
ஒவ்வொரு மாதத்திலும் வரும் பரணி நட்சத்திரம் சிறப்புக்குரியது என்றாலும், கார்த்திகை மாதத்தில் வரும் பரணி நட்சத்திரத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உள்ளது.
கார்த்திகை மாதம் முழுவதுமே இறை வழிபாட்டிற்கான விசேஷமான மாதம் தான். ஆனால் இந்த வருட பரணி தீபம், கார்த்திகை மாதம் வெள்ளிக்கிழமை சிவபெருமானின் விசேஷச நாளான பிரதோஷத்துடன் சேர்ந்து வருவது இன்னும் சிறப்பினை தருகிறது.
இப்படியான இந்த மாதத்தில் கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் ஏற்றப்படும் தீபத்தை எப்படி ஏற்ற வேண்டும்?, ஏற்றும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க….
முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த நாளாக கருதப்படுவது பரணி தீப நாள் தான்.
இந்த பிறவியில் நாம் வாழ்கின்ற காலம் முழுவதும் ஒளிமயமான வாழ்வை பெறுவதற்காகவும், இவ்வுலக வாழ்க்கை முடிந்த பிறகு மேல் உலகிற்கு செல்லும் வழியிலும், மேல் உலகிற்கு சென்ற பிறகும் இருளில் சிக்கி தவிக்காது, ஒளிமயமாக நாமும் நமது முன்னோர்களும் இருப்பதற்காகவே பரணி தீபம் ஏற்றின.
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள் முன்னோர்களின் பாவங்கள் நீங்கவும், நமது நலனுக்காக பரணி தீபம் ஏற்ற வேண்டும். திருக்கார்த்திகை தினத்திற்கு முந்தைய நாள் மாலை வேளையில் 6.30 மணிக்குள் பரணி தீபம் ஏற்ற வேண்டும்.
ஒரு சிறிய தட்டிலோ அல்லது வாழை இலையிலோ வாசலில் இரண்டு தீபங்களும், பூஜை அறையில் விளக்கும் ஏற்ற வேண்டும்.
அதோடு தனியாக ஒரு தாம்பாலத்தில் 5 விளக்குகளை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். அனைத்து விளக்குகளும் அனைத்து திசை நோக்கி எரியும் என்பதால் திசை கணக்கு கிடையாது.
ஐந்து என்பது பஞ்ச பூதங்களும் நமது உடலிலும், வெளியிலும் சரியாக இருந்து நமக்கு அருள்புரிய வேண்டும் என்பதற்காகவும், சிவபெருமானின் பஞ்ச தொழில்களை விளக்குவதாலும் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும்.
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாளன்று (13.12.2024) அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.
பரணி தீபம் ஏற்றும்போது உங்கள் வீட்டு வாசலில் இரண்டு தீபம், பூஜை அறையில் தனியாக ஐந்து நெய் தீபத்தை ஏற்றுவது சிறப்பு. மனிதன் வாழ்க்கையில் நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்யும் தவறுகளில் இருந்து விமோசனம் பெற இந்த பரணி தீபத்தை ஏற்ற வேண்டும்.
பரணி தீபத்தன்று சிவனுக்கு பூஜைக்கு தேவையான வில்வம், பூ போன்றவற்றை பறித்துக் கொடுத்தாலும், மாலையாக கட்டிக் கொடுத்தாலும், விளக்கு ஏற்றி வழிபட்டாலும், அபிஷேகத்திற்கு தேவையானவற்றை செய்து கொடுத்தாலும் கூட சிவனை நினைத்து விரதமிருந்து வழிபட்ட நல்ல பலன்கள் கிடைக்கும்.
மிகவும் சிறப்பு வாய்ந்த அரிதான இந்த நாளில் சிவபெருமானை வழிபட்டால் நடக்கவே நடக்காது என நாம் நினைத்து கொண்டிருக்கும் விஷயங்களை கூட சிவபெருமான் நடத்தி வைப்பார்.
தீராத கஷ்டம், தீராத கடன் பிரச்சினை என அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.
அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி!!
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)