டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசு தாமத நடவடிக்கை; முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்
வரும் டிசம்பர் 15 நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த இறுதி கட்ட ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது…
..டங்ஸ்டன் கனிமத்தை பொறுத்த வரை அது ஒரு அரிதான கனிமம்.
மாலிப்டினம் என்ற ஒரு கனிமத்தை எடுப்பதற்காக ஒரு குடும்பம் அமெரிக்கவிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது. எந்த குடும்பம் என்று உங்களுக்கே தெரியும்.
அதை குறிவைத்திருக்கும் இந்த ஆளும் அரசாங்கம் அதற்காக டங்ஸ்டன் எடுப்பதற்கான உரிமையை முதலில் கொடுத்தால்,அதை தொடர்ந்து மாலிப்டினத்திற்கும் அனுமதி கொடுக்கப்பட்டு முழுக்க முழுக்க ஒரு குடும்பம் மட்டும் சம்பாதிப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெடுப்பு நடவடிக்கையே இது
மேலும், டங்ஸ்டன் தொழிற்சாலை வேண்டாம் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய பிறகுதான், “நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்” என்பதை போல தொழிற்சாலையை வரவிடமாட்டோம் என்கிறது இந்த அரசு.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே கனிம ஏலம் முறை நடைமுறைக்கு வந்தும், இந்த 10 மாதம் அரசு என்ன செய்தது?
காவேரி விவகாரத்தில் அதிமுக-வின் 37 எம்.பி-கள் 28 நாட்களுக்கும் மேலாக பாராளுமன்றத்தில் மக்களுக்காக பிரச்சினை செய்தது போல் ஏன் இந்த விவகாரத்தில் திமுக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தயங்கி வருகிறது. இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அதிமுக-வை பொறுத்த வரை மக்களுக்கு விரோதமாக மத்திய அரசோ மாநில அரசோ யார் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும், அதை ஆரம்பத்திலேயே எதிர்த்து மக்கள் நலன் பாதுகாக்கும் கட்சி அதிமுக மட்டுமே.
மக்களுக்காக சட்ட ரீதியான போராட்டங்களை எடுக்க வேண்டியது, மாடல் அரசு என்று வலம் வரும் இந்த அரசின் கடமை..
இவ்வாறு டி.,ஜெயக்குமார் கூறினார்..