கோவில்பட்டியில் நகைக்காக சிறுவன் கொலையா? பக்கத்து வீட்டு மாடியில் பிணமாக கிடந்தான்   

 கோவில்பட்டியில் நகைக்காக சிறுவன் கொலையா? பக்கத்து வீட்டு மாடியில் பிணமாக கிடந்தான்   

கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். 

அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்தான்,. கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலையில் கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தான் 

இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுவன் திடீரென மாயமானான். வேளைக்கு சென்ற பெற்றோர் திரும்பி வந்து பார்த்தபோது கருப்பசாமி வீட்டில் இல்லை, இதனால் அவனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்து தேடினர்.

‌.சிறுவன் கருப்பசாமி கழுத்தில் ஒன்றை பவுன் தங்க செயின் மற்றும் கையில 1கிராம் தங்க மோதிரம் அணிந்து இருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை, இதனால்  கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சிறுவனை தேடினர். 

இந்த நிலையில் சிறுவன் கருப்பசாமி, பக்கத்து வீட்டு மாடியில் மூச்சுப் பேச்சில்லாமல் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவனை  மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்  சிறுவன் இறந்து விட்டதாகவும்,, இறந்து பல மணி நேரம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

கருப்பசாமி அம்மை நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அவன்  கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவன் தங்கச் சங்கிலி மற்றும் ஒரு கிராம் மோதிரம் காணவில்லை என்று பெற்றோர் தெரிவித்தனர். கருப்பசாமியை தங்க நகைக்காக யாராவது கொன்று மாடியில் போட்டார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர் சுரேஷ் சத்யா மற்றும் நிர்வாகிகள், சிறுவனின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *