கோவிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?

 கோவிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்?

மலர்கள் பல வகையாக உள்ளன. அவற்றின் தோற்றம் மற்றும் அதன் மணம் நமக்கு மிகவும் காணதக்கதாக அமைகிறது. நாம் கோவிலுக்கு மலர்களை எடுத்து செல்வது மற்றுமன்றி நாம் கடவுளிடம் வைத்து வணங்குவது மிகவும் நல்லது.

ஆலயங்களில் நமக்கு அளிக்கப்படும் மலர்கள் மற்றும் அனைத்து பிரசாதங்களும் நிர்மால்யம் என போற்றப்படுகிறது. நிர்மால்யம் எனில் அழுக்கற்றது, தூய்மையானது. அவற்றில் இறைவனின் அருட்சக்தி நிறைந்து இருக்கும். அவற்றை வெறும் மலர் என்றோ அன்னம் என்றோ பார்க்கக்கூடாது.

 பின்பு பெண்கள் கோவிலில் கொடுக்கும் மலர்களை வாங்கி கண்களில் பற்றி கொண்டு பின்னர் தலையில் வைப்பது மிகவும் நல்லது. ஆலயத்தின் வெளியே வந்து தான் மலர்களை பெண்கள் தலையில் சூட வேண்டும் என்பது ஒரு ஐதீகம்.

ரூபாய் நோட்டுக்கும் வெறும் தாளுக்கும் வேறுபாடு இருக்கிறது. ரூபாய் நோட்டுக்களில் அதனில் பதிக்கப்பட்ட எண்களைப் பொறுத்து மதிப்பு மாறுகிறது.

அது போன்று ஒவ்வொரு கடவுளின் பிரசாதமும் ஒவ்வொரு சக்தி உடையது. அவற்றை நாம் பக்தியுடன் கண்களில் ஒற்றிக் கொண்டு, நமது நெற்றியிலும், இருதயத்திலும் வைத்து அந்த இறை அருள் நம்முள் உட்புகுவதாக எண்ணுதல் வேண்டும்.

பிறகு வீட்டில் பூஜை அறை இருப்பின் அங்கு வடக்கிலோ, வடகிழக்கு திசையிலோ ஒரு தாம்பாளத்தின் மீது மலர்களை வைத்துவிடல் வேண்டும்.

வீட்டில் பெண்கள் அவற்றிலிருந்து சிறிது எடுத்து பக்தியுடன் தலையில் வைத்துக் கொள்ளலாம். மறுநாள் காய்ந்த மலர்களை நீர்நிலைகளிலோ, மரங்களின் கீழோ வைத்திட வேண்டும். நமது வீட்டில் உள்ள இறை உருவங்களுக்கு கோவிலில் கொடுக்கும் மலர்களை சாற்றுதல் கூடாது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *