செம்மொழித் தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும்; உலகத்திருக்குறள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
உலகத்திருக்குறள் கூட்டமைப்பின் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் பெருந்திரள் கோரிக்கை முழக்கம் கோவில்பட்டி. பயணியர் விடுதி முன்பு இன்று , செவ்வாய்க்கிழமை, காலை 10 மணிக்கு நடைபெற்றது.
செம்மொழித் தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கச் சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும். அறிவிக்க வேண்டும் .சென்னை – மதுரை உயர்நீதி மன்றங்களில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை இந்திய அரசை வலியுத்தி பெருந்திரள் கோரிக்கை முழக்கம்
உலகத்திருக்குறள் கூட்டமைப்புமாநில துணை தலைவர். முனைவர்: க.கருத்தப்பாண்டி தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணிச் செயலாளர் வழக்கறிஞர். ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.
கி.பிரபு கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட துறை இயக்குனர் நூலகர் பூல்பாண்டி, மாவட்ட கரண ஆசான் .சிவானந்தம் மாவட்ட செயலாளர்.ச. செல்லத்துரை (எ) செல்வம்: கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் கு.மு.சங்கர் கணேஷ், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைப்பொதுச் செயலாளர் கயத்தார். செ. கணேசன், அறக்கட்டளை பொருளாளர், ப.முத்துசெல்வம்ஆகியோர் நோக்க உரையாற்றினார்கள்.
வழக்கறிஞர்:கள் போ.முருகானந்தம், மு.சங்கர், கம்பன் கழகம் தலைவர் அ. துரைப்பாண்டியன், வழக்கறிஞர். செந்தில்குமார் , , தமிழ் ஆசிரியை முருகசரஸ்வதி ஆகியோர் சான்று உரையாற்றினார்கள்.
மாவட்ட பொருளாளர் செயாசனார்த்னன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிளை செயலாளர். செ. கண்ணன், நன்றி கூறினார்..