ரோகித், விராட் இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள்: மைக்கில் வாஹன் கருத்து

 ரோகித், விராட் இருவரும் சிறப்பாக விளையாடுவார்கள்: மைக்கில் வாஹன் கருத்து

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர். 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கில் வாஹன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கில் வாஹன் கூறியதாவது:-

ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நிச்சயம் நன்றாக ரன்களை குவிக்க வேண்டும். அவர்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நிச்சயம் வெல்ல முடியும்.

அவர்களால் ரன்கள் குவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா மண்ணில் சொதப்புவதற்கும் வாய்ப்பு இருப்பதால் கூடுதல் பயமாகவும் உள்ளது. ஏனென்றால் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடுவது சாதாரண விசயம் அல்ல. பேட் கம்மின்ஸ், ஹேசல்வுட் மற்றும் மிட்சல் ஸ்டார்க் என்று ஆஸ்திரேலியாவின் 3 தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இணைந்து அட்டாக் செய்ய உள்ளனர். அதுவும் சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் உற்சாகத்தை கொடுக்கும்.

அதனால் 3 பவுலர்களையும் சமாளிக்க வேண்டுமென்றால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் மிகச்சிறந்த டெக்னிக் மற்றும் சிறந்த மனநிலையுடன் விளையாட வேண்டும். கடந்த முறை ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றிய போது, விராட் கோலி விளையாடவில்லை. விராட் கோலி இல்லாமலேயே 32 ஆண்டுகளாக எந்த அணியும் செய்ய முடியாததை இந்திய அணி சாதித்தது. காபா மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது.

இம்முறை விராட் கோலியும் இருக்கிறார். ஆனால் அவரின் பேட்டிங் பார்ம் தான் சோகத்தை அளிக்கிறது. ஏனென்றால் மிட்சல் சான்ட்னர் வீசிய புல் டாஸ் பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்திருப்பது அவர் மீது சந்தேகத்தை அதிகரித்துள்ளது. அவர் மீண்டும் பேட்டிங் பார்முக்கு வர தீவிரமாக இருப்பதை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. இவ்வாறு மைக்கில் வாஹன் தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *