நீங்கள் சீக்கிரம் கம்பேக் கொடுங்கள்: விராட் கோலிக்கு யுவராஜ் சிங் வாழ்த்து
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை விராட் கோலிக்கு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் வீடியோ ஒன்றை பகிர்ந்து தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தினை விராட் கோலிக்கு தெரிவித்திருக்கிறார்.
யுவராஜ் சிங் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:-
சிறப்பான கம்பேக் நம்முடைய செட் பேக்கில் இருந்துதான் வருகிறது. இந்த உலகம் உங்களின் கம்பேக்கை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறது. கடந்த காலத்தில் அதை நீங்கள் செய்தீர்கள். இப்போது மீண்டும் ஒருமுறை அதை செய்து காண்பிப்பீர்கள் என நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் விராட் கோலி என்று வாழ்த்தி யுவராஜ் பதிவிட்டிருக்கிறார்.
விராட் கோலி சமீபமாக டெஸ்ட் போட்டிகளில் ரொம்பவே சுமாராக ஆடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 93 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இதனை தொடர்ந்து அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதை மனதில் வைத்துதான் யுவராஜ் சிங் கோலிக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.