சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விருத்திமான் சஹா

 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விருத்திமான் சஹா

இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் விருத்திமான் சஹா. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. அவர் மாநில அளவிலான உள்ளூர் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும் மட்டுமே விளையாடி வந்தார்.

விருத்திமான் சஹா தற்போது ரஞ்சி டிராபி தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், விருத்திமான் சஹா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரே தனது கடைசி தொடராக இருக்கும் என அறிவித்து இருக்கிறார். சஹா இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 3 சதம் மற்றும் 6 அரை சதம் அடித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 1353 ரன்கள் குவித்து இருக்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு, 2021 இல் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடியதே இவரின் கடைசி டெஸ்ட் போட்டி.

விருத்திமான் சஹா ஓய்வு குறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:- நேசத்திற்குரிய கிரிக்கெட் பயணத்தில் இந்த ரஞ்சி டிராபி சீசனே எனது கடைசி தொடராக இருக்கும். நான் ஓய்வு பெறுவதற்கு முன் ஒரு முறை கடைசியாக பெங்கால் அணிக்காக ஆட இருக்கிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த சீசனை எப்போதும் மனதில் வைத்து இருப்பேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *