வரும் ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்: அமைச்சர் பெரிய கருப்பன்
![வரும் ஞாயிற்று கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்: அமைச்சர் பெரிய கருப்பன்](https://tn96news.com/wp-content/uploads/2024/10/ration-shop-850x560.jpg)
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்று கிழமை அன்று இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி (வியாழ கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் நோக்கில் வருகிற ஞாயிற்று கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்
இதன்படி நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலை கடைகளிலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் வரும் ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் பொருள்களை பெறலாம் என்றும். 24,610 முழுநேர ரேஷன் கடைகள், 10,164 பகுதி நேர ரேஷன் கடைகள் என மொத்தம் 34,774 ரேஷன் கடைகள் இயங்கும் என்றும் அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)