முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம் தொடக்கம்
தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த முகாம் நடைபெறுகிறது.முகாமில் பங்கேற்கும் பொது மக்களிடம் அதிகாரி எடுத்த விசாரணைக்கு பிறகு காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ( திங்கட்கிழமை) விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம் தொடங்கியது. ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் உள்ளவர்களுக்கு இந்த காப்பீடு அட்டை வழங்கப்படுகிறது,
மருத்துவக் காப்பீட்டு முகாமை நகர்மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார், முகாமில் ரெயில்வே தனி வட்டாட்சியர் சுபா, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ்,திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,திமுக நிர்வாகிகள் மாத்தே ஸ்வரன், பாரதி, மகேந்திரன் ,ராஜன், தாமோதரக்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் லவராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்டவர்கள், தங்கள் ஆதார் அட்டை ஒரிஜினல் மற்றும் நகல்கள், ரேஷன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல்கள், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் கொண்டு வந்து இருந்தனர்/ அவற்றை அலுவலகர்கள் சரிபார்த்து பதிவு செய்து கொண்டனர். அவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால் உட்காருவதற்கு இருக்க வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.
முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு அட்டை பதிவு செய்தனர். இந்த முகாம் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.